பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் - லெந்து தியானம் 42

Rev. I Mesia Dhas -
1 நிமிடத்தில் வாசிக்கலாம்
-
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் - லெந்து தியானம் 42
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்
1தீமோத்தேயு  1:15

ஆதியில் பாவம் செய்த தூதர்களை தேவன் தப்ப விடாமல் தண்டித்தார். ஆதியில் பாவம் செய்த ஆதிமனிதர்களையும் தண்டித்தார். பாவம் செய்கிற ஆத்மா சாகும் என்றும் பாவத்தின் சம்பளம் மரணம் என்றும் கட்டளையிட்டார். இப்படிப்பட்ட தேவனின் உள்ளத்தில் உண்டான இரக்க சிந்தையே கிருபையாக மாறி பாவிகளை இரட்சிக்க தேவன் தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இவ்வுலகுக்கு மனித குமாரனாக அனுப்பியது. 

அவர் மனுக்குலத்தின் பாவங்களுக்காக தன்னை பலியாக ஒப்புக் கொடுத்தார். இதனை அனுபவித்த மனிதர்களில் ஒருவராகிய பவுல் பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார் என்று உலகெங்கும் பிரகடனப்படுத்தினார். மரணமே வந்தாலும் இந்த செய்தியை அப்போஸ்தலர்கள் எங்கும் அறிவித்தனர். நம்மிடத்திலும் அறிவித்தனர். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு நாம் தேவனுடைய பிள்ளைகளாக மாறினோம். 
 
இயேசு : பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. 
நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். 
லூக் 5:31,32
சிந்திக்க
பாவிகள் மனந்திரும்ப பட நீ செய்தது என்ன?.. செய்து கொண்டு இருப்பது என்ன?
Write your feedback and help us to improve the site.
2023 - 2024 © Bible Trends, All rights Reserved
Developed & Maintained by Catalizo
Cross Carrying Mission's  Project