நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி - லெந்து தியானம் 39

Rev. I Mesia Dhas -
1 நிமிடத்தில் வாசிக்கலாம்
-
நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி - லெந்து தியானம் 39
நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே. நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.
1யோவான் 2:2
பாவம் தேவனுக்கும் நமக்கும் இடையில் பிரிவினையை உண்டாக்கியது. நாம் தேவனை அணுக முடியாமலும் தேவன் நமக்கு நன்மை செய்ய முடியாமலும் தடுத்தது. இந்தப் பாவத்தை நீக்கி நம்மை தேவனோடு ஒப்புரவாக்குவதற்காகவே தேவன் தமது குமாரனை கிருபையின்பலியாக அன்பின் பலியாக செலுத்தினார். இதை நாம் விரும்பினதினால் அல்ல அவர் தம் இஷ்டப்படி நம்மீது அன்பு கூர்ந்ததினால் ஏற்படுத்திய பலியாகும். ஆகவே தான் அது கிருபாதார பலி எனப்படுகிறது. 

நாம் மட்டுமல்ல இவ்வுலகின் மாந்தர் எவராயினும் அவரை ஏற்றுக் கொண்டு அறிக்கையிட்டால் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு தேவனோடு ஒப்புரவாக்கப்பட முடியும். இந்த இயேசு கிறிஸ்துவின் பலியினால் நாம் அவருடைய ஆசீர்வாதங்களுக்கும் சுதந்திர வாளிகளானோம். 
மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.
மத்தேயு 20:28
சிந்திக்க 
நமக்காக இயேசு உயிரை கொடுத்திருக்க அவருக்காக நாம் என்ன செய்து வருகிறோம்?
Write your feedback and help us to improve the site.
2023 - 2024 © Bible Trends, All rights Reserved
Developed & Maintained by Catalizo
Cross Carrying Mission's  Project