தாவீது வெறும் ஒரு ஆராதனை வீரன் அல்ல - 2

Lian Dhas -
1 நிமிடத்தில் வாசிக்கலாம்
-
தாவீது வெறும் ஒரு ஆராதனை வீரன் அல்ல - 2
சவுலையும் தேவன் தான் தெரிந்து கொண்டார், தாவீதையும் தேவன் தான் தெரிந்துகொண்டார், இருவருக்கும் அவர் கிருபை இருந்தது, ஆனால் தாவீது தான் செய்த எல்லாவற்றிலும் தேவனுக்கு உண்மையாக இருந்தான். தன் மனதுக்கு சரி என்று நினைத்து செய்த தீங்கை, தேவ மனிதர்களுடைய எச்சரிப்புக்கு பிறகு, அந்த தீங்கை செய்ததற்கு தேவனோடு ஒப்புரவாகி அவருடைய இரக்கத்தை பெற்று கொண்டான். கிருபை இருக்கிறதே, கிருபை என்னை தாங்குமே என்று சொல்லி கொண்டு கீழ்ப்படியாமையும், தேவன் அருளின நல் வார்த்தைகளையும், கட்டளைகளையும் பின்பற்றாமல் இருந்தால் அந்த கிருபை எப்படி பெருகும்? கீழ்ப்படிதல் என்பது சுய பெலன் அல்ல, அது நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற வழி, இயேசு இப்படியாக சொன்னார்,

நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.
யோவான் 15:10
இயேசு கிறிஸ்து தன் பிதாவுக்கு கீழ்படிந்து அவருடைய அன்பில் நிலைத்து நின்றார், அப்படியென்றால் அவருடைய சதையையும், இரத்தத்தையும் பானம்பண்ணுகிற நாம் அவர் அன்பில் நிலை நிற்க்க வேண்டுமென்றால், அவருடைய கற்பனைக்கு கீழ்ப்படிய வேண்டும்.

தாவீதுக்கும், சவுலுக்கும் உள்ள வேறுபாடு, கீழ்ப்படிதல். சங்கீதம் 119:29,30 வரை வாசிக்கும்போது, பொய் வழியை என்னைவிட்டு அகற்றும், மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, உம்முடைய நியாங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன். 

சவுலிடத்தில் தேவன் அமலெக்கியரை மடங்கடிக்கும்படியாகவும், அவர்களுக்குரியவைகளை அழிக்கும்படியாகவும் சாமுவேல் மூலமாக அறிவிக்கிறார். சவுலும் அப்படியாக அமலெக்கியரை மடங்கடித்தான், ஆனால் மக்கள் அவர்களுக்குரியவைகளில் நலமானதை மீட்டுகொண்டு வந்ததை, சவுல் தடுக்கவில்லை. இந்த காரியம் தேவனுக்கு வருத்தத்தை அளித்தது. சாமுவேலைகொண்டு தேவன் சவுலை எச்சரித்தார், அவனோ இவைகள் தேவனுக்கு பலி இடுவதற்காக கொண்டுவந்தேன் என்றான். அதற்கு சாமுவேல் சொல்கிறார், 
கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். 1 சாமுவேல் 15:22
ஆராதனை செய்து தேவனை வெளிப்படுத்துவது, அவருடைய மாட்ச்சிமையை உலகறிய செய்வதை காட்டிலும், அவருக்கு கீழ்படிந்து அவருடைய கட்டளைகளை பின்பற்றி, கிறிஸ்துவை வெளிப்படுத்தாத எந்த மனிதனும், மாய்மாலக்காரன். அவர்களை அறியேன் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார்.
உண்மையாகவே யாரெல்லாம் தாவீதின் ஆராதனையை பின்பற்றி வருகிறார்களோ, அவர்கள் வெறும் ஆராதனை மட்டுமே பின்பற்றி வாழ்கிறார்கள். ஆனால், அவருடைய கீழ்ப்படிதல் அல்ல.

Indeed, whoever follows the worship of David, they live only following worship. But, not his obedience.

Write your feedback and help us to improve the site.
2023 - 2024 © Bible Trends, All rights Reserved
Developed & Maintained by Catalizo
Cross Carrying Mission's  Project