கிறிஸ்தவ பெற்றோர்களும் பிள்ளைகளும்

Lian Dhas -
2 நிமிடத்தில் வாசிக்கலாம்
-
கிறிஸ்தவ பெற்றோர்களும் பிள்ளைகளும்
இன்றைய கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எந்த வழியில் நடத்தி செல்கின்றனர் அல்லது நாம் நம்முடைய பிள்ளைகளை எவ்வாறு நடத்துகிறோம், அல்லது வருங்கால பெற்றோர்கள் நாம் நம்முடைய பிள்ளைகளை எந்த வழியில் நடத்த வேண்டும் என்ற அறிவும், ஞானம் மிகவும் அவசியமாக இருக்கிறது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்த தரிசனத்தை தெளிவாகவே பெற்று கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அதனை எப்படி செயல்படுத்துகிறது என்பதில் அநேகர் வழி மாறி சென்றுவிடுகிறார்கள்.

இங்கே நான் மூன்று நபர்களை குறித்து திருமறையிலிருந்து உங்களுக்கு எடுத்து காட்ட விரும்புகிறேன்.

1. ரெபேக்காள் - யாக்கோபு
மூத்தவன் இளையவனை சேவிப்பான் என்று கர்த்தர் ரெபேக்காளிடன் சொண்ணபிறகு, அவள் அதனை தன் மனதில் வைத்துகொண்டாள். ஆதியாகமம் 25:23

இங்கு ரெபேக்கா தன் பிள்ளையை குறித்த தரிசனத்தை மனதிலே வைத்துக்கொண்டால், அவள் யாக்கோபை அதற்கேற்றவாறு வளர்த்து வந்தாள், யாக்கோபு குறிப்பிட்ட வயது வரைக்கும் தன் ஆலோசனைப்படி நடத்தி வந்தாள். ஒருவேளை தன் தரிசனத்தை உணர்ச்சிவசப்பட்டு, சிறுவயதிலேயே யாக்கோபுக்கு தினித்திருந்தால், ஈசாக்கு ஆரம்பத்திலே தடுத்திருப்பான். இங்கே ரெபேக்காளின் குணாதிசயம் யாக்கோபு என்ற சிறந்த வாலிபனை உருவாக்கியது. ஒருவேளை அவன் துரோகியாக இருக்கலாம், அல்லது ஏமாற்றுக்காரனாக இருந்திருக்கலாம், ஆனால் அவனை குறித்த தரிசனம் நிறைவேறியது. அதுவே ரெபேக்காளின் அற்ப்பணிப்பும், உறுதிப்பாடும்.

2. யாக்கோபு - யோசேப்பு
யோசேப்பு தன் தகப்பன் யாக்கோபிடம் உங்களுடைய அரிக்கட்டுகள் எல்லாம் என் அரிகட்டுக்கு முன்பாக சுற்றி வணங்கி நின்றன என்று சொன்னபோது, அவனை எச்சரித்து, அவைகளை மனதில் வைத்து கொண்டான்.  ஆதியாகமம் 37:7-11

யோசேப்பை சொப்பணக்காரன் என்று தன் சகோதரர்களால் ஏளனம் செய்யப்பட்டான், சிறு வயதிலிருந்து அவன் சொப்பணங்களை கண்டு அதற்க்கு விளக்கமும் சொல்லி வந்தான். அப்படியாக, அரிகட்டுகள் தன்னை சுற்றி வணங்கினதை குறித்து சொப்பணத்தை சொன்ன யோசேப்பு, யாக்கோபு முதலாவதாக யோசேப்பை கண்டித்தான், ஒருவேளை யோசேப்பு சொல்லியவைகளை யாக்கோபு ஊக்குவித்திருந்தால் அவன் சகோதரர்கள் அவன் மீது இன்னும் கோபம் அதிகமாயிருக்கும். ஆனால் யாக்கோபு தன் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டான். யாக்கோபு தன் தாயின் குணாதிசயங்களை தனக்குள் வைத்ததால் தான் யோசேப்பு அவைகளை குறித்து பெருமைக்கொள்ள கூடாது என்பதற்காக கண்டித்தான். அவைகள் நிறைவேறும் நாள் வந்தபோது யோசேப்பிடம் பெருமை இல்லை, தேவனுடைய சித்தம் மட்டுமே என்று சொல்ல கூடிய தாழ்மை அவனிடம் இருந்தது.

3. மரியாள் - இயேசு - சிமியோன்
மரியாளிடம் தேவ தூதர்கள் தோன்றி உண்ணில் தேவ குமாரன் பிறப்பார் அவர் இந்த பூமியை அரசாளுவார் என்றும், சிமியோன் என்பவன் உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிபோம் என்று சொன்னபோது அதனை மனதில் பத்திரப்படுத்தி கொண்டார்கள். லூக்கா 2:51

இங்கே இயேசுவின் தாய் தான் தேவனுடைய குமாரனை பெறப்பொகிறேன் என்று தன்னை குறித்து பெருமைப்பாராட்டவில்லை, அதற்க்கு மாறாக அவள் இயேசுவை வேத அறிவிலும், கீழ்ப்படிதலிலும் சிறப்பாக வளர்த்தார். தேவனுடைய குமாரன் என்று சொல்லி இயேசுவின் விருப்பத்திற்கு அவர்கள் வளர்க்கவில்லை. தன் பெற்றோருக்கு கீழ்ப்படிதல் உள்ளவராக, தன் தந்தையின் தொழில் செய்து வந்தார். குறிப்பிட்ட காலம் வரைக்கும் தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். 

யாக்கோபு, யோசேப்பு, இயேசு கிறிஸ்து இவர்கள் அனைவரும் குறித்த காலம் வரையிலும் தன் பெற்றோர்களுக்கு கீழ்படிந்து வாழ்ந்து வந்தார்கள், அவர்கள் பெற்றோர் தாங்கள் பெற்ற தரிசனங்கள் நிறைவேரும்படியாக, அவர்களை அந்த வழியில் நன்றாக வளர்த்தார்கள், தங்களையும் அதற்கு தயார்படுத்தி கொண்டார்கள்.

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் என்றும், கர்ப்பத்தின் கணி அவரால் கிடைக்கும் பலன் என்றும் திருமறையில் சொல்லப்படுகிறது. பிள்ளைகள், தேவனுக்குரியவர்கள் என்று பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும், திருமறையில் உள்ள வார்த்தைகள் எல்லா காலக்கட்டத்திலும் பயன்தரும் என்பதை பிள்ளைகள் கற்றுக்கொள்ளும்படியாக பெற்றோர்கள் முயற்ச்சி செய்ய வேண்டும்.

இன்றைய பெற்றோர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று எனக்கு புரியவில்லை. அவர்களுக்கு கிடைத்த தன் பிள்ளைகளினுடைய வெளிப்படுத்தல் நினைவில் கொண்டு அவர்களை நல்வழிப்படுத்தாமல் உலகம் முழுவதும் தப்பட்டம் அடித்து, அதில் பெருமை கொள்கிறார்கள். பிள்ளைகளை குறித்த இரகசிய தரிசனங்களை வியாபாரம் செய்கிறார்கள். குறிப்பிட்ட காலம் வரைக்கும் பிள்ளைகள் பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் வளர்க்க வேண்டும், யாக்கோபு, யோசேப்பு, இயேசுகிறிஸ்துவும் வாலிப பருவம் வரை பெற்றோர்களின் அறிவுரைப்படியே வாழ்ந்து வந்தார்கள். 

பெற்றோர்கள் தங்களுக்கு கிடைத்த பிள்ளைகளின் தரிசனத்தை சாட்சி என்று எண்ணுவார்கள் என்றால், அவர்கள் தங்களை தாங்களே குழியில் விழதள்ளுகிறார்கள், பிள்ளைகளையும் சேர்த்து. அந்த பிள்ளை வாழும் வாழ்க்கைதான் சாட்சியோ அன்றி, பெற்றோர்கள் பெயர் பிரதாபத்திர்க்கு தரிசனங்களை சாட்சிகளாக மாற்ற அல்ல. அவைகள் பெற்றோர்களை மகிமைப்படுத்துமே அன்றி, தேவனை ஒருபோதும் மகிமைப்படுத்தாது.
பிள்ளைகள் குறித்த தரிசனங்கள் பெற்றோருக்கும் தேவனுக்கும் உள்ள இரகசியம்.
Write your feedback and help us to improve the site.
2023 - 2024 © Bible Trends, All rights Reserved
Developed & Maintained by Catalizo
Cross Carrying Mission's  Project