ஒளியில் நடவுங்கள் - பாகம் 1

Lian Dhas -
2 நிமிடத்தில் வாசிக்கலாம்
-
ஒளியில் நடவுங்கள் - பாகம் 1
சேலம் YMCA மற்றும் சேலம் துணை பிராந்தியம் சார்பாக "துணை பிராந்தியத்தின் லீடர்ஸ் மீட்" சேலம் YMCA-வில் வைத்து நடைபெற்றது. இதில் தலைவர் முனைவர். சாமுவேல் டி. ஸ்டீபன்ஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வட அமெரிக்காவின் மின்னிசொட்டா பகுதியில் The Y Church போதகர் பாஸ்டர். பிஜோன் டிக்சன் அவர்கள் கலந்துகொண்டு தேவ செய்தியை பகிர்ந்துகொண்டார். மற்றும் இந்த நிகழ்வில் அநேக YMCA பொறுப்பாளர்கள், தலைவர்கள், போதகர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

தொடக்க உரையை முனைவர். சாமுவேல் டி. ஸ்டீபன்ஸ் அவர்கள் "Walking in the Light" - "வெளிச்சத்தில் நடப்பது" குறித்து ஒரு குறுகிய கண்ணோட்டத்தை காண்பித்தார். அப்பொழுது, மூன்று காரியங்களை குறித்து பேசினார், 
  • நான் ஒளியாயிருக்கிறேன் (I am the Light) 
  • இரட்சிப்பாகிய ஒளி (The Light of Salvation)
  • ஒளியின் பிரசன்னம் (Prsence of Light)
தொடர்ந்து பேசிய அவர், "இன்றைய காலகட்டத்தில் நாம் மற்றவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்வது மிக போராட்டமாக இருக்கிறது, இயேசுவை அறியாத ஒருவரை திருச்சபைக்கு வாருங்கள் என்றால், ஏளனமாக அல்லது தவறான கண்ணோட்டத்தில் நம்மை அனுகிறார்கள், ஆனால் YMCA க்கு வாருங்கள் என்றால், மிகவும் உற்சாகத்தோடு வருகிறார்கள்."

"தேசத்திலே நடக்கும் நிலையற்ற சூழ்நிலையில், YMCA என்பது கிறிஸ்தவர்களுக்கு வெளிச்சமாக இருக்கிறது, தேவ பிரசன்னத்தின் மூலம் நாம் ஒளியை கொண்டு செல்வோம்", என்றார்.

சிறப்பு விருந்தினர் பாஸ்டர்.Bjon Dixon அவர்கள் தொடர்ந்து பேசினார்,

பழைய ஏற்பாட்டில் வெளிச்சம் எப்படியெல்லாம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்பதை குறித்து மேலோட்டமாக காண்பித்தார், "ஆதியாகமத்தில் ஆண்டவர் முதலாவது வெளிச்சம் உண்டாகக்கடவது என்று சொல்லி வெளிச்சத்தை உண்டாக்கினார் ஆதியாகமம் 1:3, பின்பு பகலையும் இரவையும் பிரிக்கும்வன்னமாக ஆகாயவிரிவிலே சுடர்களை உண்டாக்கினார், ஆதியாகமம் 1:14"

"ஆபிரகாமை தேவன் அழைக்கும்போது, வானத்தை பார், அதிலிருக்கும் பிரகாசிக்கும் நட்சத்திரங்களை எண்ணக்கூடுமானால் அந்த அளவிற்கு உன் சந்ததியை பெருகப்பண்ணுவேன் என்று வாக்குகொடுத்தார்"

"இஸ்ராயேல் ஜனங்களை பார்த்து ஏசாயா தீர்க்கதரிசி, ஏழும்பி பிரகாசி என்றும், மறைமுகமாக இங்கு இஸ்ராயேல் உலகிற்கு ஒளியாயிருக்கிறார்கள்." என்றார்.

"மோசே வனந்தரத்திலே எப்பொழுதெல்லாம் தேவனை தரிசித்தானோ அப்பொழுதெல்லாம், மோசேயின் முகம் பிரகாசித்தது."
"தேவன் உருவாக்கிய வானிலை மாற்றங்கள் ஏற்படலாம், ஆனால் தேவன் என்றுமே மாறதவர்"
தொடர்ந்து பேசிய அவர், "தாவீது தன்னுடைய வாழ்க்கையில் கர்த்தரே வெளிச்சமாக கண்டார், அவரே என் இரட்சிப்பு என்று சொன்னார், சங்கீதம் 27:1, என்றும், ஒளியை வஸ்திரமாக தரித்திருக்கிறார் சங்கீதம் 104:2, ஆண்டவருடைய வசனம் வெளிச்சமாயிருக்கிறது, அவைகள் பேதைகளை உணர்வுள்ளவர்களாக மாற்றுகிறது, சங்கீதம் 119:130"

"சிறையிருப்பில் இருந்த இஸ்ராயேல் ஜனங்கள் ஒரு பெரிய வெளிச்சத்தை காண்பதாக ஏசாயா தீர்க்கதரிசி இந்த அதிகாரத்தில் குறிப்பிடுகிறார், 9:2 வசனம் வாசிக்கும்போது, அந்த வெளிச்சம் இயேசு கிறிஸ்து என்றும் மேசியா என்றும் நம்பினார்கள், அந்த வெளிச்சம் கிடைக்கும்படி இஸ்ராயேல் தேசம் சுமார் 400 வருடம் காத்திருந்தது. அப்படியென்றால், இஸ்ராயேல் தேசம் மற்றும் ஏசாயா அந்த வெளிச்சத்தை 400 வருடம் முன்னதாகவே கண்டு காத்திருந்தனர்." 

யோவான் 8:12 வாசிக்கும்போது, "மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். "

இயேசு எங்கு நின்று இந்த காரியத்தை குறித்து பேசுகிறார் என்றால், "திருச்சபையில் வைத்திருந்த தருமபெட்டிக்கு அருகாமையிலிருந்து பேசினார், வ20." அந்த காலகட்டம் 7 நாள் பண்டிகை ஆசரிப்பாயிருந்தது, அந்த பண்டிகை எதை குறித்தது என்றால்,
 
1. தேவனுக்கு நன்றி செலுத்துதல்
2. 40 வருடம் வனாந்தரத்தில் தேவன் நடத்தியதை நினைவு கூறுதல்

அந்த நாள் பண்டிகை ஆசரிப்பின் கடைசி நாளாயிருந்தது, அன்றைய தினம் இஸ்ராயேல் மக்கள் 7 கோபுரத்தை எழுப்பி, ஒவ்வொரு கோபுரத்தின் மேலே நான்கு சிறகுள்ள பறவை அமர்ந்திருப்பது போலவும், அதற்க்கு கீழாக ஒரு பெரிய பாத்திரம் வைக்கப்பட்டிருப்பதும், அந்த பாத்திரத்தில் 38லி என்னை ஊற்றப்பட்டிருப்பதும், அதின் வழியாய் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. 

அந்த என்னை தீர்ந்து நெருப்பு அமைந்த நிமிடத்திலேயே இயேசு கிறிஸ்து இப்படியாக சொன்னார், "நானே  வெளிச்சமாயிருக்கிறேன்" உலகத்தில் இருக்கிற வெளிச்சங்கள் எல்லாம் அமைந்து போகும் நான் காட்டுகிற இந்த வெளிச்சம் நித்தியம் என்று சொன்னார்.

ஆகாவே நம்முடைய வாழ்க்கையில் நாம் எப்படியாக இயேசு என்ற வெளிச்சத்தை காட்டுகிறோம்?
இருளிலே நாம் எப்படி அந்த ஒளியை பெற்றோம்?

சற்று சிந்திப்போம்!

தொடரும்... 2 ஆம் பகுதி
Write your feedback and help us to improve the site.
2023 - 2024 © Bible Trends, All rights Reserved
Developed & Maintained by Catalizo
Cross Carrying Mission's  Project