அதை கண்டவன் சாட்சி கொடுக்கிறான் - லெந்து தியானம் 45

Rev. I Mesia Dhas -
1 நிமிடத்தில் வாசிக்கலாம்
-
அதை கண்டவன் சாட்சி கொடுக்கிறான் - லெந்து தியானம் 45
அதை கண்டவன் சாட்சி கொடுக்கிறான்.  அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது.
யோவான் 19:34,35
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைவதை மேற்பரப்பார்வையிடுகிறவன் கிறிஸ்துவின் இரத்தம் குறித்து கண்ட காட்சியினிமிமித்தமாக சாட்சி இடுகிறவனாக மாறிப் போனான். நாம் காலம் காலமாக கிறிஸ்துவின் சிலுவை குறித்து பிரசங்கிக்கின்றோமே அவரது சிலுவையை சுமந்து பாவங்களுக்கு முடிவு உண்டாக்குகிறோமா? கிறிஸ்துவின் இரத்தத்தின் மீட்பு குறித்து சாட்சியம் அளித்து ஜனங்களை மீட்படைய செய்கிறோமா?
ஆனால்,
இவ்வுலக ஆஸ்தி கல்வி பணம் அழகு போன்றவைகள் குறித்து மனிதர்கள் சாட்சியம் அளிப்பர். அன்பு சமாதான விசுவாசம் பரிசுத்தம் கொண்டு அநேகரை மீட்பதினால் பரலோகம் சாட்சியம் அளிக்கும் என்பதை மறவாதீர்.
நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது. தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே
1யோவா 5:9
சிந்திக்க
மனித சாட்சியை விடவும் தேவசாட்சி சிறந்தது என்று தெரியுமா?
Write your feedback and help us to improve the site.
2023 - 2024 © Bible Trends, All rights Reserved
Developed & Maintained by Catalizo
Cross Carrying Mission's  Project